ஹத்ராஸ் சம்பவத்திற்கு எதிர்ப்பு : மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி.!!

Author: Babu
3 October 2020, 5:47 pm
mamta 1- updatenews360
Quick Share

மேற்கு வங்கம் : உத்தரபிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் வயலில் புல் அறுத்துக் கொண்டிருந்த 19 வயதுடைய தலீத் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கழுத்து எலும்பை உடைத்து, நாக்கையும் அறுத்திருப்பதாக வெளியான தகவலும், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலுக்கச் செய்தது.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்து வருகின்றன. சமூக வலைதளங்களிலும் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஹத்ராஸில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது. கொல்கத்தாவின் பிர்லா பிளானட்டேரியத்திலிருந்து காந்தி மூர்த்தி வரை நடந்தப் பேரணியில் 1,000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 50

0

0