கரையைக் கடந்தது காற்றழுத்த தாழ்வு நிலையால் பாதிப்பா…? நிம்மதியை இழந்து தவிக்கும் மக்கள்..!! உஷார் நிலையில் 2 மாவட்டம்!!!

Author: Babu Lakshmanan
11 November 2021, 8:42 pm
Chennai rain - updatenews360
Quick Share

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை சென்னை அருகே கரையை கடந்தது.

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், சாலைகள் மற்றும் வீடுகளுக்குள் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து மழை பெய்வதால், பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும், மழை எப்போதும் நிற்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலை 5.15 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. பின்னர், அது இரவு 7.45 மணியளவில் சென்னை அருகே கரையை கடந்தது. தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வேகத்தில் காற்று வீசியது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து, வலுவிழந்த நிலையில், சென்னையின் அருகே நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளைக்கு முழுவதுமாக வலுவிழந்து விடும்.

காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்தாலும் வேலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

முன்னதாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- நவ.,12ம் தேதி நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். நவ.13ல் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களிலும், நவ.,14ல் நெல்லை, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும். நவ.,15ல் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 298

0

0