7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்கள்னு தெரியுமா?…

15 January 2021, 9:11 am
heavy rain - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கிய நிலையில் தொடர்ந்து நிலவி வரும் கிழக்கு திசைக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வரும் 19ம் தேதி முதல் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Views: - 9

0

0