சாத்தான்குளம் சம்பவம்…! சிபிஐ பதிலளிக்க அவகாசம் தந்த ஹைகோர்ட்…!

3 August 2020, 2:48 pm
sathankulam-custodial-death-case 1- updatenews360
Quick Share

மதுரை: சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிஐ பதிலளிக்க அவகாசம் அளித்து ஜாமீன் மனுவை 17ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் சித்ரவதையில் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 10 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். வழக்கு இப்போது சிபிஐ கைகளில் உள்ளது. அவர்கள் குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பிறகு அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான காவலர் முருகன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். சிபிஐ எதிர்ப்பை அடுத்து, ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆகையால் காவலர் முருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மேலதிகாரிகளின் கட்டளைக்கு பணிந்து அந்த புகாரில் கையொப்பமிட்டதை தவிர எனக்கு சம்பந்தம் இல்லை, எனவே ஜாமீன் வழங்குமாறு கோரி இருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.அப்பொழுது ஜாமீன் தரக்கூடாது என்று கூறி, உயிரிழந்த ஜெயராஜ் மனைவி செல்வராணி என்பவர் மனு தாக்கல் செய்தார்.

அப்போது சிபிஐ தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை ஆகஸ்ட் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அன்றைய தினம் சிபிஐ பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Views: - 9

0

0