நீ எல்லாம் ஒரு***** : ஹிஜாப் விவகாரம் குறித்து பேசிய திருமாவளவனை திட்டிய பாஜக பெண் பிரபலம்…!!

Author: Babu Lakshmanan
10 February 2022, 6:34 pm
Quick Share

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல்.திருமாவளவனை பாஜக பிரபலம் விமர்சனம் செய்துள்ளார்.

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தற்போது மிகப்பெரும் அளவிலான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரிக்குள் அனுமதிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்களை ஹிஜாப் அணிந்து வர அனுமதித்தால், நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம் என்று இந்து மாணவிகள் அணிந்து சென்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.

மேலும், பர்தா அணிந்து வந்த மாணவியை நோக்கி காவி துண்டு அணிந்தவர்கள் கோஷம் எழுப்பிய போது, அவர்களுக்கு பயப்படாமல், அந்த அல்லாஹு அக்பர் எனப் பதிலுக்கு கூவினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதிலும் இருந்து கண்டனங்களும், கருத்துக்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் புயலை கிளப்பியது. ஆடை என்பது அவரவர் உரிமை எனக் கூறி எதிர்கட்சியினர் காரசாரமாக பேசினர். இதன் ஒரு பகுதியாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் உரையாற்றினார். அப்போது, ஜெய் பீம் மற்றும் அல்லாஹு அக்பர் எனச் சொல்லி தனது உரையை முடித்தார்.

Thirumavlavan- updatenews360 (18)-Recovered

பின்னர், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தங்கையே.. உன் போர்க்குரல் உலகுக்கு புதுப் பொருளை உணர்த்தியுள்ளது. அல்லாஹூ_அக்பர்: பெண்மை மிகப்பெரியது, சுதந்திரம் மிகப்பெரியது, சமூகநீதி மிகப்பெரியது சமத்துவம் மிகப்பெரியது, எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், அவரது இந்தப் பதிவிற்கு பாஜக கலாச்சார பிரிவு நிர்வாகி காயத்ரி ரகுராம் கிண்டலடிப்பது போன்ற பதிவை போட்டுள்ளார். அதாவது, “நீ எல்லாம் ஒரு… fill in the blanks please,” என நெட்டிசன்களிடம் கேட்டுள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு ஆதராவாகவும், எதிராகவும் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Views: - 415

0

0