இமாச்சலில் ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி : பிரதமர் மோடி இரங்கல்

16 November 2020, 2:51 pm
himachal accident - updatenews360
Quick Share

இமாச்சல பிரதேசத்தில் ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசம் மண்டியில் உள்ள சுந்தர்நகர் பகுதியில் அமைந்துள்ள ஆற்றுப் பாலத்தை கடக்க முயன்ற வேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்தது. ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்த அளவே இருந்ததால், வேன் தரையில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 2 பேர் அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவர்.

நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “இமாச்சலப்பிரதேசம் மண்டியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. அரசின் சார்பில் மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் செய்து வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 20

0

0