பாஜக இந்தியை திணிக்க போராடவில்லை அவர்களது திட்டமே இதுதான் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
விக்கிரவாண்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீண்ட காலமாக மழை நீர் கழிவுநீர் வெளியேற முன்னெச்சரிக்கை நடவடிக்கை சென்னையில் எடுக்கவில்லை.
கட்டமைப்பு சரியாக இருந்தால் போதும் மழை நீர் வெளியேறிவிடும்,போதுமான அளவு மழை பொழிவு தமிழகத்தில் இருந்தாலும் அப்படி பெய்யும் மழை நீரை கடலில் விட்டுட்டு மீண்டும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.
மழை பெய்த பின் மழைநீர் வடியும் போது நீரோடு சேர்ந்து சாலையும் சென்று விடுகிறது. மழை நீர் பாதிப்பு குறித்து பேச தகுதி அதிமுகவிற்கு இல்லை என கூறினார்.
தமிழக ஆளுநர் தமிழக அரசு மழையினை சிறப்பாக கையாண்டுள்ளதாக பாராட்டுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான் ஆளுநரோடு மோதல் போக்கை கைவிட்டு செயல்பட வேண்டுமென முதல்வர் கூறியிருப்பதாக அமைச்சர் கோவி செழியன் தெரிவிக்கிறார்.
ஆனால் அந்த ஆளுநரை மாற்ற கூறியவர்கள் தான் திமுகவினர் என்றும் கூட்டணி வைச்சிருந்தபோது வராத ராஜ்நாத்சிங் கூட்டணி இல்லாத போது நாணய வெளியீட்டு விழாவிற்கு தமிழகம் வருகை புரிவதாகவும், மத்திய அரசு அதிகாரத்தில் இருப்பதால் ஒன்றிய அரசு இந்தி வாரம் கொண்டாடுகிறார்கள்.
இதையும் படியுங்க: “துரோகம் தியாகத்தைப் பற்றி பேசுகிறது.. மீண்டும் முற்றும் இபிஎஸ் – ஓபிஎஸ் மோதல்!
பல்வேறு மாநிலங்களின் வரி பணத்தை வைத்து ஒன்றிய அரசு செயல்படுகிறது நான் தமிழ் வாரம் கொண்டாட அனுமதி கொடுபார்களா என கேள்வி எழுப்பினார்.
நவம்பவர் மாத ஒன்றாம் தேதி கொடியேற்ற அனுமதிப்பார்களா என்றும் இந்தி வாரம் கொண்டாடுங்கள் மகிழ்ச்சி அதே போன்று தமிழ் மொழி வாரம் கொண்டாட அனுமதித்தால் மகிழ்ச்சி அதனை வரவேற்பேன் என்றார்.
மீனவ மக்கள் வாழும் பகுதியில் நச்சு ஆலைகள் திறக்கப்படுகின்றன. ஏனென்றால் மீனவர்களிடம் அதிகாரம் இல்லை கேரளா மீனவர்கள் எல்லை தாண்டி வரும் போது சுடவில்லை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்லும் போது சுடப்படுகிறார்கள். எல்லாவற்றுக்கும் தமிழன் என்பதால் சுடப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
திராவிட மாடல் எல்லாத்தையும் ஒழிச்சிட்டோம் என்றால் அனைவருக்கும் மொழிபற்று வந்துவிடும் திமுகவிற்கும் மொழி போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை, என்றும் மொழியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த திமுக மக்களை ஏமாற்றி உள்ளதாக தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.