மதச்சார்பின்மை அரசுதானே… விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லுங்க : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி ‘செக்’!!

Author: Babu Lakshmanan
16 July 2022, 1:05 pm
Quick Share

எதிர்வர இருக்கும் விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து சொல்வாரா..? என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

இந்துக்களின் உரிமை மீட்பு என்னும் தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணத்தை இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 28ம் தேதி திருச்செந்தூரில் தொடங்கப்பட்ட இந்தப் பிரச்சாரப் பயணம் வரும் 31ம் தேதி சென்னையில் முடிவு பெறுகிறது.

kadeshwara subramaniam - updatenews360

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சாமி தரிசனம் செய்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் இந்து விரோத ஆட்சி நடக்கிறது. சர்ச் சொத்து கிறிஸ்தவர்களுக்கும், மசூதி சொத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமாகிறது. ஆனால், இந்து கோவில்கள் வருமானத்தை அரசு எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் நிறைய கோவில்கள் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளன.

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுரம் பணிகள் பாதியில் நிற்கிறது. கோவில் வருவாயை செலவு செய்தாலே, கும்பாபிஷேகம் பணிகளை செய்து முடிக்கலாம். ஆனால், அதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் நாங்கள் மதசார்பற்ற அரசு நடத்துவதாக கூறும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, உண்மையில் மதசார்பின்மை அரசு நடத்துவதாக இருந்தால், வரும் விநாயகர் சதுர்த்திக்கு இந்து மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோவில்களில் ஆகம விதிகளை முறையாக பின்பற்றப்படுவதில்லை. மேலும் அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோவில்களில் மக்களே கும்பாபிஷேகம் செய்ய முன்வந்தாலும், அதற்கும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதனால் அந்த துறையில் ஊழல் தான் அதிகரித்து வருகிறது, என வேதனை தெரிவித்துள்ளார்.

Views: - 626

0

0