தமிழகத்தில் நீடிக்கும் கனமழை: 7 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

Author: Aarthi Sivakumar
13 November 2021, 9:49 am
School Leave - Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை நீர் இன்னும் வடியாமல் உள்ள நிலையில், மேலும் ஒரு சில மாவட்டங்களில் ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Views: - 435

0

0