ஹவுசிங் லோன் EMI கட்டுபவரா நீங்க..? மத்திய பட்ஜெட்டில் இதோ உங்களுக்கான குட் நியூஸ்..!!

1 February 2021, 1:39 pm
housing loan - updatenews360
Quick Share

டெல்லி : வீட்டுக்கடன் செலுத்துவர்களுக்கான வரிச்சலுகையை மத்திய அரசு மேலும் நீட்டித்துள்ளது.

நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது, அவர் வீட்டுக்கடன் செலுத்துவர்களுக்கான முக்கிய அறிவிப்பை அதில் வெளியிட்டுள்ளார்.

அதாவது, குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கான வட்டி வரிச்சலுகையை மேலும் ஒராண்டு காலம் நீட்டிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். இதன்மூலம், வீட்டுக்கடன் வரிச்சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக வழங்கப்பட்டது நீடிக்கம். அதோடு, வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரிவிலக்கு பெறலாம்.

Views: - 0

0

0