பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை… குற்றவாளிகள் மீது நடத்திய என்கவுண்ட்டரில் புதிய திருப்பம்… சிக்கலில் சிக்கிய போலீஸ்!!

Author: Babu Lakshmanan
20 May 2022, 4:47 pm
Quick Share

ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த 4 பேரை என்கவுண்ட்டர் செய்த போலீசாருக்கு தற்போது சிக்கல் உருவாகியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு பெண் கால்நடை மருத்துவரை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அவரை கொலை செய்து உடலையும் எரித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த போலீசார், அவர்கள் நால்வரையும் என்கவுண்ட்டர் செய்தது. போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற போது அவர்களை என்கவுண்ட்டர் செய்ய நேர்ந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த என்கவுண்ட்டர் குறித்து விசாரணை நடத்த 3 பேர் அடங்கிய விசாரணை ஆணையத்தை உச்சநீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைத்தது.

இந்த நிலையில், என்கவுண்ட்டர் சம்பவம் போலியானது என்று விசாரணை ஆணையம் அறிக்கை சமர்பித்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களை கொலை செய்யும் நோக்கிலேயே இந்த என்கவுண்ட்டர் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த சூப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 10 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யவும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

விசாரணை ஆணையத்தின் இந்த அறிக்கை தெலுங்கானா போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Views: - 464

0

0