எம்ஜிஆர், ஜெ.,வை போன்ற தலைவன் நான் அல்ல.. அதிமுகவின் விசுவாசமிக்க தொண்டன் : பொதுக்குழுவில் எடப்பாடியார் உருக்கம்..!!!

9 January 2021, 3:55 pm
CM edappadi palanisamy 1 - updatenews360
Quick Share

சென்னை : எம்ஜிஆர், ஜெயலலிதாவை போன்ற ஆளுமை மிக்க தலைவன் அல்ல என்றும், நான் அதிமுகவின் விசுவாசமிக்க தொண்டன்தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருக்கமாக பேசியுள்ளார்.

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராகவும், கூட்டணி மற்றும் தேர்தல் வியூகம் வகுக்கும் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்குதல் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அவர் பேசியதாவது :- சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி விட்டதால், இனி வரும் நாட்களில் கடுமையாக பணியாற்றுவோம். அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றினால்தான், அதிமுக வெற்றி பெறும். வரும் தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் அல்ல. அதிமுகவின் விசுவாசமான தொண்டன்தான் நான். நான் பேசும் வார்த்தைகள் அனைத்தும் எனது இதயத்தின் ஆழ் மனதில் இருந்து வருபவை. 4 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை கொடுத்திருப்பதாக நம்புகிறேன். திட்டமிட்டு செயல்பட்டால் தேர்தலில் வெற்றி நிச்சயம். இன்னும் ஒரு மாதத்தில் மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து விடுவோம்.

ஆளுநரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். உண்மையில்லாத கருத்துக்களை கூறி பிரச்சாரம் செய்தாலும், அதிமுகவை வீழ்த்த முடியாது, என்று கூறினார்.

Views: - 0

0

0