உதயநிதி துணை முதல்வர் என்ற அறிவிப்புக்காக காத்திருக்கிறேன் : அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
Author: Udayachandran RadhaKrishnan19 செப்டம்பர் 2024, 3:58 மணி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் வரும் 28ம்தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
கூட்டத்துக்கு, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான க.சுந்தரம் வரவேற்புரையாற்றுகிறார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.
இந்த கூட்டத்தில் கி. வீரமணி, இரா. முத்தரசன், எம்.எச்.ஜவாஹிருல்லா பொன்.குமார் கருணாஸ், கு. செல்வப்பெருந்தகை, வைகோ, கே.எம்.காதர்மொய்தீன், ஈ.ஆர்.ஈஸ்வரன், எர்ணாவூர் நாராயணன், அதியமான், தொல். திருமாவளவன், தி.வேல்முருகன், முருகவேல் ராஜன், திருப்பூர் அல்தாப், கே. பாலகிருஷ்ணன், கமல்ஹாசன், ஜி.எம்.தர் வாண்டையார், தமீமுன் அன்சாரி, பி.என்.அம்மாவாசி என முக்கியத் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை என்ன தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்ச்சி என்பதால் , திமுகவின் பவள விழா பொதுக்கூட்டம் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக திமுக பவள விழா பொதுக்கூட்டம் இடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று நத்தப்பேட்டை பகுதியில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், எழிலரசன், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை அடுத்த செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டோம். மிக பிரம்மாண்டமான முறையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்க: பாரதமாதா உயிரோடு இருந்திருந்தால் அவரையும் பலாத்காரம் செய்து கொன்றிருப்பார்கள்… சீமான் சர்ச்சை பேச்சால் சலசலப்பு!
உதயநிதி ஸ்டாலின் முதன்மை முதலமைச்சராக அறிவிக்கப்படுவார்களா என செய்தியாளர்களின் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில் , செப்.28ஆம் தேதி நடைபெற உள்ள திமுக பவள பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
அல்லது இன்னும் ஓரிரு நாட்களோ அல்லது 10 நாட்களுக்குள் துணை முதலமைச்சராக அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் அறிவிப்புகாக , காத்துக் இருப்பதாக தெரிவித்தார்.
0
0