அண்ணாமலை போல ஒரு அசிங்கமான அரசியல் மனிதரை நான் பார்த்ததே இல்லை : முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி வேதனை!
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து அதிமுக துணை பொது செயலாளர் கே பி முனுசாமி இன்று வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குந்தாரப்பள்ளி, பண்டப்பள்ளி, திப்பனப்பள்ளி கூட்ரோடு, போன்ற பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சிறப்பு திட்டங்களை திமுக அரசு ரத்து செய்ததை எடுத்துரைத்தும் மீண்டும் அதிமுக அரசின் திட்டங்கள் தொடர வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய கேபி முனுசாமி கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் இரண்டு நாட்களாக வாக்கு சேகரித்து வருகிறார். மக்கள் அவரை மகிழ்ச்சியோடு வரவேற்று வருகின்றனர். மக்களின் தேவைகளை அறிந்து அவை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.
ஜெயலலிதா தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தபோது மோடியா, லேடியா, என ஜெயலலிதா வாக்கு சேகரித்தார். அப்போது மோடியை எவ்வளவு தூரத்தில் ஜெயலலிதா வைத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும், அப்படிப்பட்ட மோடியை, டிடிவி தினகரன் சந்தர்ப்பவாதத்துக்காக, தன்னை பாதுகாத்துக் கொள்ள மோடி உடன் கூட்டணி வைத்துக்கொண்டு மோடியை ஜெயலலிதாவுடம் ஒப்பிட்டு நாடகம் நடத்துகிறார்.
எதிர்க்கட்சிகளுக்கு கேட்கும் சின்னங்களை ஒதுக்காமல் தேர்தல் ஆணையம் தவிர்க்கிறது என்றால் அந்த தேர்தல் ஆணையத்திற்கு ஆட்சியாளர்கள் அழுத்தம் இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. நாடு முழுவதும் பாஜகவினர் கற்பனை உலகத்தில் மிதந்து கொண்டு உள்ளனர்.
இந்தியா முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக ஊடகங்கள் அரசியல் விமர்சகர்கள் மூலமாக 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி மக்கள் மனதில் திணித்து வருகின்றனர்.
இதனை பாஜக உறுப்பினர் வானது சீனிவாசன் பேசி வருகிறார். கோவை மக்களவை தேர்தல் முடிவு என்பது பாஜக தமிழகத்தில் எத்தனாவது இடத்திற்கு செல்ல இருக்கிறது என்பதை மக்கள் தெரிவிப்பார்கள்.
இந்திய தேர்தல் ஆணையம் ஆட்சியாளர்கள் அழுத்தத்தின் காரணமாக அதிகார துஷ்பிரயோகம் செயல்பட முடியுமே அல்லாமல் தேர்தல் நடக்கும் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு அல்லது கழக நிர்வாகிகளிடம் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் சூழல் வராது. அப்படி செய்தால் அதற்கான பலனை வாக்குச்சாவடி அலுவலர்கள் அனுபவிப்பார்கள்.
பாஜக போன்ற மாற்றுக் கட்சியின் உள்ளவர்கள் கூட எம்ஜிஆர் ஜெயலலிதா படத்தை போட்டு வாக்கு கேட்கிறார்கள் என்றால் இரு தலைவர்களும் 140 கோடி மக்களிடையே தேசிய தலைவராக அவர்கள் பர்ணமைத்து உள்ளார்கள்.
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக பாஜக உடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளதாக பரப்பரை தொடர்பான கேள்விக்கு. அப்பனுக்கு தப்பாமல் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் அவரது அப்பா முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை பாதுகாத்துக் கொள்ள, சிறுபான்மை மக்கள் வாக்குகள் கிடைக்காமல் சென்று விடுமோ என உளறிக்கொண்டு உள்ளார். சுயநலம் கடந்த மக்களை ஏமாற்றி வருகிறார்.
கள்ளக் கூட்டணி என்பது திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் உள்ளது. உதாரணம் மோடி தமிழகம் வரும் போது கோ பேக் மோடி கருப்பு பலூன் ஏற்றினார்கள். இரண்டு ஆண்டுக்குப் பிறகு மோடி தமிழகத்திற்கு வந்தபோது வெல்கம் மோடி என சொல்கிறார்கள் அப்போது சொன்னது எந்த வாய் இப்போது சொல்வது எந்த வாய் என நீங்களே யோகித்துக் கொள்ளுங்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறு பிள்ளைத்தனமாக பேசுகிறார். கீழ்த்தரமான அரசியலை மேடையில் நிறுத்துகிறார். அவர் வைக்கிற பதவிக்கு அழகு இல்லாமல் சோதித்துக் கொள்கிறார்.
நாடு முழுவதும் மோடி அலை என்பது மோடியுடன் சேர்த்து அவர்களின் அடிவரிடிகள் தான் தூக்கி பிடித்து உள்ளனர்.மோடியின் அடிவரிடிகளின் இயங்கும் ஊடகங்கள் அரசியல் விமர்சனங்கள் பேசி வருகின்றனர் மக்கள் சரியான முடிவு எடுத்துள்ளனர் தேர்தலுக்குப் பிறகு மோடி எத்தனை இடங்களில் வெற்றி பெறுகிறார் என தெரிய வரும்.
தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களை திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கள் நீண்ட காலமாக அவர்கள் மனதில் ஒரு பய உணர்வை ஏற்படுத்தி இருந்தார்கள் பாஜக இருப்பதால் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டு விடும் என பய உணர்வை ஏற்படுத்தி இருந்தனர். அந்த பயத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படை தன்மையாக பேசி சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார். இதனால் சிறுபான்மை மக்கள் 60 விழுக்காடு அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநில தலைவர் பொறுப்பேற்ற பிறகு அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள பல்வேறு கருத்துக்களை சொல்லி வருகிறார். அவர் சொல்லும் கருத்துக்கள் உண்மைக்கு மாறாக உள்ளது. அவரது கருத்துக்களால் பலரின் மனங்கள் மிகவும் புண்படுகிறது.
உதாரணம் கோவை அதிமுக வேட்பாளர் அவர்களின் தந்தை 11 வயதில் உயிரிழந்து விடுகிறார். அவரது தாயார் மிகவும் சிரமப்பட்டு அவரை படித்து வைக்கிறார். மெரிட்டில் ஐஐடி மாணவராக படித்தவர். ஐஐடியில் இட ஒதுக்கீடு கிடையாது அப்படிப்பட்டவரை அண்ணாமலை எவ்வளவு ஒரு கீழ்த்தரமான கருத்துக்கள் சொல்லக்கூடிய கீழ் நிலையில் இருக்கக்கூடிய சாதாரண மனிதர் அண்ணாமலை, அந்த சாதாரண மனிதரை ஊடகங்கள் தூக்கி பிடித்துக் கொண்டு உள்ளீர்கள்.
கடந்த ஒரு ஆண்டுகளாக அண்ணாமலை பேசியதை கருத்துக்களை எல்லாம் கோர்வையாக எடுத்து வையுங்கள் அண்ணாமலை போன்ற அசிங்கமான அரசியல் மனிதரை தமிழகத்தில் பார்க்க முடியாது என்பதை நீங்களே உணவீர்கள் என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.