கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதியே விலகல் கடிதம் அளித்துவிட்டதாக இன்றைய தேதியிட்டு சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் துணை பொது செயலாளர் பதவியை ராஜினமா செய்ததாக தகவல்கள் பரவி வந்தன.
நேற்று சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை.
இதனால் சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்துவிட்டதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. இந்த நிலையில், திமுகவில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவிப்புஇது தொடர்பாக வெளியிட்டுள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பது எனது விருப்பம். 2009- ஆம் ஆண்டிற்கு பிறகு கட்சி பணிகளை மட்டுமே செய்து வந்தேன்” என்று தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 29 ஆம் தேதியே விலகல் கடிதம் அளித்துவிட்டதாக இன்றைய தேதியிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன், திமுக அமைச்சர்களை, திமுகவை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த தர்மசங்கடத்தால் சுப்புலட்சுமி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாக கூறப்படுகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.