கள்ளக்குறிச்சி மாவட்டம் கூடலூரில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்கு ஒரு அலுவலகம் இருக்கும். ஆனால் அதிமுகவிலோ சசிகலா அணி, தீபா அணி, ஓபிஎஸ், ஈபிஎஸ் என மூன்று, நான்கு அலுவலகங்கள் இருக்கின்றன. இதனால் அக்கட்சித் தொண்டர்கள் எங்கு செல்வது என திணறி வருகின்றனர்.
இதேபோல் பாஜகவுக்கும் ஐடி, ஈடி உள்ளிட்ட அணிகள் உண்டு. அவர்கள் தேர்தல் நேரத்தின் போது இறக்கி விடப்படுவார்கள். இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. நான் குறிப்பிடும் இந்த பாஜக அணியில் உள்ள 95 சதவீதத்தினர், மற்ற கட்சியினர் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஊழல் ஒழிப்பு பற்றி பேசி வரும் தமிழ்நாடு ஆளுநர், அதிமுக முன்னாள் அமைச்சர்களான கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க அனுமதி மறுக்கிறார்.
கடந்த ஆட்சியின் போது, அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சிக்கியவர்களிடம் சோதனை நடத்தவில்லை. மாறாக அவர்களை அடிமைப்படுத்திக் கொண்டனர்.
அதுபோல திமுகவையும் மத்திய பாஜக அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியோ, ஓபிஎஸ் தலைமையிலான ஆட்சியோ அல்ல.
தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி. உங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம், ED (அமலாக்கத்துறை) க்கும் பயப்பட மாட்டோம். உங்கள் பம்மாத்து வேலையெல்லாம் திமுகவிடம் நடக்காது.
சென்ற மாதம் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு. இந்த மாதம் அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு. இரண்டிலும் ஒன்றும் கிடைக்கவில்லை. அடுத்த அமலாக்கத்துறை ரெய்டு எனது வீட்டில் தானாம். பாஜகவினர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
வா.. என்னோட அட்ரஸ் வேணும்னாலும் கொடுக்குறேன். உன் ED-க்குலாம் பயப்படுற ஆளா நான். நான் யாரு.. நான் கருணாநிதி பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மகன். நான் உங்க மோடியைப் பார்த்தும் பயப்பட மாட்டேன். உங்க ஈடியை பார்த்தும் பயப்பட மாட்டேன்.
எனக்கு மடியிலும் கனம் இல்லை. வழியிலும் பயம் கிடையாது. நான் சவால் விடுறேன். வா.. எப்போ வேணா வா. ஆனா சொல்லிட்டு வா” என சவால் விட்டுப் பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.