கொரோனா பரவல் எதிரொலி : ஐசிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

20 April 2021, 11:50 am
Plus-Two-exam - updatenews360
Quick Share

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 4ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஐசிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவில் உயிர் பலியும் பதிவாகிக் கொண்டிருப்பதால், பாதிப்புகளுக்கு ஏற்றவாறு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அந்தந்த மாநிலங்கள் விதித்து வருகின்றன.

குறிப்பாக, அண்மையில் திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரி வகுப்புகளும் இனி ஆன்லைனில் நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மே 4ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஐசிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக சிஐஎஸ்சிஇ வாரியம் அறிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பே தங்களின் உச்சபட்ச முன்னிரிமை என்றும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் தேதி மட்டும் ஜுன் மாதம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 78

0

0