பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா : பரிசோதனையில் உறுதி!!
23 January 2021, 3:20 pmகர்நாடகா : பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் இருந்த அவரது உறவினரான இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகியோருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாக உள்ள நிலையில் நேற்று முன்தினம் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் சிறையில் அவருடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான முடிவுகங்ள வெளியான நிலையில், அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இளவரசிக்கு நடத்தப்பட் ஆர்டிபிசிஆர் சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளதால் சிறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0
0