ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே 11 பேர் கைதான நிலையில், நேற்று மலர்க்கொடி, ஹரிஹரன், திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட மலர்கொடி மற்றும் ஹரிஹரன், சதீஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் வழக்கறிஞர் மலர்க்கொடி ஏற்கெனவே கைதான வழக்கறிஞர் அருளுடன் தொடர்பில் இருந்தவர். இந்த 14 பேரில் திருவேங்கடம் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி சம்போ செந்திலை போலீசார் தேடி வருகின்றனர்.
நேற்று கைது செய்யப்பட்ட ஹரிஹரன் கொடுத்த தகவலின் பேரில் சம்போ செந்திலுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.செந்தில் கொடுத்த பணத்தில் ஹரிஹரன் மூலமாக ரூ.4 லட்சம் பணம் அருளுக்கு கைமாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரிஹரன் மூலமாக அருள் மற்றும் பொன்னை பாலு கும்பலை, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
This website uses cookies.