தமிழகத்தில் 4,481 பேருக்கு கொரோனா பாதிப்பு: 102 பேர் பலி

Author: Udhayakumar Raman
1 July 2021, 8:33 pm
Delhi Corona- Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் மேலும் 4,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 24,84,177 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 4,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,84,177 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 102 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,721 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 5,044 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,13,930 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 37,526 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சென்னையில் இன்று மேலும் 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் இன்று 498 பேருக்கும், ஈரோட்டில் 411 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 63 ஆயிரத்து 654 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Views: - 101

0

0