வங்கக் கடலில் உருவானது நிவர் புயல்: இன்று மாலை தீவிர புயலாக மாறும்..!!

24 November 2020, 9:23 am
nivar img - updatenews360
Quick Share

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ‘நிவர்’ புயலாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு அருகே 470 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

மேலும் சென்னை, கடலூர், நாகை, புதுச்சேரி, பாம்பன், காரைக்கால், தூத்துக்குடி, ராமேஸ்வரம், குளைச்சல் உள்ளிட்ட 11 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இன்று கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், 25 ஆம் தேதி புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக ஆந்திர கடற்கரை பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீச இருப்பதால், பழவேற்காடு முதல் கோடிக்கரை வரையிலான வட கடலோர மாவட்டங்கள் மற்றும் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான தென் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 22

0

0