இந்தியா – ஆஸி., இடையே மே 15 வரை விமான சேவை ரத்து : உலக நாடுகளுடனான தொடர்பை துண்டிக்கும் கொரோனா..!!

27 April 2021, 11:34 am
flights_updatenews360
Quick Share

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பயணிகள் விமான சேவை மே 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி, ஒருநாள் சராசரி கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. நேற்று 3.50 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகிய நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 3.23 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த 5 நாட்களில் ஏறுமுகமாகவே இருந்து வந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை, இன்றுதான் சற்று குறைந்துள்ளது. அதேபோல, தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி 2,771 பேர் உயிரிழந்துள்ளனர். 2,51,827 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா இடையே பயணிகள் விமான சேவை மே 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொற்று பரவலின் வேகம் அதிகரித்து இருப்பதால், ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிஸன் இந்தத் தடையை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே, ஹாங்காங், ஈரான், துபாய் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுடனான விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன.

Views: - 195

0

0