இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா… மீண்டும் வருகிறது ஊரடங்கு… முதல் உத்தரவை போட்ட மாநிலம்…!!!

Author: Babu Lakshmanan
18 April 2022, 7:58 pm
Corona_Mask_UpdateNews360
Quick Share

கொரோனா தொற்று பரவல் 2 அலைகளுக்கு பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. முகக்கவசம் என்பது இப்போது மக்களின் அன்றாட பயன்பாடுகளில் ஒன்றாகவே மாறிப்போனது.

இப்படியிருக்கையில், முதல் மற்றும் 2வது அலைகளால் சிதைந்து போன இந்தியாவில், ஆயிரக்கணக்கானோர் செத்தும் மடிந்தனர். இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் தினசரி எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. அதனால் கொரொனா கால ஊரடங்கு, விதிமுறைகள், கட்டுப்பாடுகள் முழுவதுமாய் நீக்கப்பட்டன.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தினசரி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது மீண்டும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக, காசியாபாத், லக்னோ, மீரட் போன்ற நகரங்களில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரித்தால் தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வர வாய்ப்புள்ளது.

Views: - 409

0

0