6 லட்சத்தை நோக்கி கொரோனா பாதிப்பு…! இந்தியாவில் உயரும் நோயாளிகளின் எண்ணிக்கை

30 June 2020, 10:23 am
Corona District Wise - Updatenews360
Quick Share

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டு இருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து நேற்று வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து 783 ஆக இருந்தது.

24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 18 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. புதியதாக 418 பேர் பலியாகி உள்ளனர். ஆகையால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 893  ஆகவும் உயர்ந்து இருக்கிறது. 3 லட்சத்து 34 ஆயிரத்து 822-பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

Leave a Reply