இந்தியா – துபாய் இடையிலான விமான சேவைக்கு விதிக்கப்பட்ட 15 நாள் தடை நீக்கம்!!
19 September 2020, 12:13 pmகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியா – துபாய் இடையிலான விமான சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த 15 நாட்கள் தடை நீக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளிடையே கொரோனா அதிகம் பரவி வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. எனவே, இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்தியாவில் இருந்து துபாயிக்கு சென்ற விமானங்களில் பயணித்த விமானப் பயணிகளில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து துபாய்க்கு 15 நாட்கள் விமானங்கள் வர துபாய் அரசு தடை விதித்துள்ளது.
மேலும், விமானத்தில் கொரோனா பாதித்தவர்களை ஏற்றி வருவதை தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு ஏர் இந்தியாவிடம் துபாய் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், மேற்கண்ட உத்தரவு திரும்ப பெறப்படுவதாக துபாய் அரசு அறிவித்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இன்று முதல் மீண்டும் விமானங்கள் வழக்கம்போல் துபாய், இந்தியா இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.