நீதியை நிலைநாட்டிய மாநிலங்களின் பட்டியல் வெளியீடு : தமிழகத்தின் நிலை தெரியுமா..?

29 January 2021, 12:33 pm
police-exam - updatenews360
Quick Share

நாட்டில் நீதியை நிலைநாட்டும் மாநிலங்களில் தமிழகத்திற்கு 2வது இடம் கிடைத்துள்ளது.

2020ம் ஆண்டில் நாட்டின் சட்டம், காவல் மற்றும் நீதித்துறைகளின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. சிறைச்சாலை ஊழியர்களின் எண்ணிக்கை, காவலர்களின் எண்ணிக்கை உள்பட 53 காரணிகளை அடிப்படையாக வைத்து, நீதித்துறைகள் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வுகளின் அறிக்கையை இந்திய நீதித்துறை அறிக்கை நேற்று வெளியிட்டுள்ளது. இதில், நீதியை சிறப்பாக நிலைநாட்டிய 18 மாநிலங்கள் கொண்ட பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு 2வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 3வது இடம் பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 2வது இடத்திற்கு தமிழகம் முன்னேறியுள்ளது. முதலிடத்தை மகாராஷ்டிரா பிடித்துள்ளது.

இந்திய நீதித்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, மொத்தம் 10 புள்ளிகளுக்கு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் முதலிடம் பிடித்த மகாராஷ்டிரா 5.77 புள்ளிகளும், தமிழகம் 5.73 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் 3.15 புள்ளிகளுடன் உத்தரபிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.

மேலும், நாடு முழுவதும் சிறைத்துறைகளில் அதிக நெரிசல் காணப்படுவதாகவும், அவர்களில் 69 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள் எனவும் தெரிய வந்துள்ளது.

Views: - 0

0

0