எதிரி நாடுகளை நடுநடுங்க வைக்கும் இந்தியா : அச்சுறுத்தும் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி..!!

23 October 2020, 12:27 pm
Indian navy missile -updatenews360
Quick Share

நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதிரி நாட்டு கப்பல்களை தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணையை இந்தியா வெற்றிக்கரமாக பரிசோதனை செய்தது.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீனா ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. சீனாவும் அவ்வப்போது எல்லையில் ஊடுருவல் உள்ளிட்ட அத்துமீறல்களை செய்து இந்தியாவை சீண்டி வருகிறது.

இதைத் தொடர்ந்து, தனது எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, முப்படைகளையும் இந்தியா தயார் படுத்தி வருகிறது. அந்த வகையில், பிரம்மோஸ் சூப்பர்சானிக், பிரம்மோஸ் ஏவுகணை, பிருத்வி-2 ஏவுகளை, சவுர்யா ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு ஏவுகணை பரிசோதனைகளை கடந்த இரு மாதத்தில் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

இந்த நிலையில், எதிரி நாட்டு கப்பல்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணையை இந்திய கடற்படை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. அரபிக் கடலில் ஐஎன்எஸ் பிரபாலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, தொலைவில் நிறுததி வைக்கப்பட்டிருந்த கப்பற் படைக்கு சொந்தமான பழைய கோதாவரி கப்பலை மிகவும் துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த வீடியோவை இந்திய கடற்படையினர் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Views: - 13

0

0