தமிழக அரசின் ஓராண்டு ஆட்சி நிறைவு நாளில் அமைச்சர் கூறிய தகவல் : லிஸ்ட்டில் இருந்து அவுட் ஆன வாக்குறுதி..!!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2022, 9:05 pm
Minister PTR -Updatenews360
Quick Share

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் மூலம் பென்சன் வழங்குவது சாத்தியமில்லை என அமைச்சர் அறிவித்துள்ளது அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அரசுப் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்களுக்கு ஒருங்கிணைந்த பிரத்யேக கைபேசி செயலி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

அந்த செயலி மூலம் தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம், விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிப்பார்த்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதன்பின் பேசிய அவர், தனிநபர் ஒருவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. புதிய ஓய்வூதியத் திட்டதில் ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என தெரிவித்தார்.

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை புறநகர் மின்சார ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை இணைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை திருமங்கலத்தில் இருந்து அவதிக்கு மெட்ரோ ரயில் இயக்குவது குறித்து சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் எனவும் கூறினார்.

மேலும், அரசாங்கத்தின் பணிகளில் நீதிமன்றம் அநாவசியமாக கை வைக்கக்கூடாது. நீதிமன்ற தீர்ப்புகள் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. நீதித்துறை, அரசாங்கம், சட்டமன்றம் ஆகியவற்றின் எல்லை தெளிவு இல்லாமல் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தலைமையும், அதிகாரிகளும் சரியாக அமையவில்லை எனவும் குற்றசாட்டினார்.பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 388

0

0