அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்: பல்கலை.கள் ஒப்புதல்…!!

18 October 2020, 10:45 am
chennai univ - updatenews360
Quick Share

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க பல்கலை.கள் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறுதியாண்டு தவிர, பல்கலைக்கழகங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த சுழலில் அரியர் தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு அனைத்து இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

anna-university-updatenews360

இதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை பல்கலை கழகம் உள்ளிட்ட மற்ற பல்கலை கழகங்களை சேர்ந்த முக்கிய நபர்கள் பங்கேற்றனர். அதில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்மூலம் , சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என கூறப்படுகிறது. இதனால் சுமார் 1 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.

Views: - 24

0

0