கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு ‘விறு விறு’: பாதுகாப்பு பணியில் 4,500 போலீசார்…436 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை..!!

Author: Rajesh
19 February 2022, 8:17 am
Quick Share

கோவை: கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கியுள்ளது. மொத்தம் 3,366 பேர் போட்டியிடும் சூழலில் தேர்தல் பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு பணியில் 4500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் உள்ளன. மாநகராட்சிகளில் 100 வார்டுகளும், 7 நகராட்சிகளில் 198 வார்டுகளும் மற்றும் 33 பேரூராட்சிகளில் 513 வார்டுகளும் உள்ளன.

தேர்தலை நடத்தும் பொருட்டு மாநகராட்சியில் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலரும், 20 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 15 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சிகளில் 7 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 21 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 21 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேரூராட்சிகளில் 33 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 66 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் 33 பறக்கும் படையினரும் என மொத்தம் 41 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 107 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 69 பறக்கும் படையினரும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குச்சாவடி அலுவலர்கள் வீதம் சுமார் 10,172 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 778 வேட்பாளர்களும், 7 நகராட்சிகளில் உள்ள 198 வார்டுகளில் 861 வேட்பாளர்களும், 33 பேரூராட்சிகளில் உள்ள 513 வார்டுகளில் 1,727 வேட்பாளர்கள் என 811 இடங்களுக்கு 3,366 பேர் போட்டியிடுகின்றனர். இதில் பேரூராட்சிகளில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இதையடுத்து பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 513 வார்டுகளில் 504 வார்டுகளுக்கு மட்டுமே இன்று தேர்தல் நடைபெற உள்ளது.

கோவை மாநகராட்சியில் 1290 வாக்குச் சாவடிகளும், 7 நகராட்சிகளில் 390 வாக்குச் சாவடிகளும், 33 பேரூராட்சிகளில் 632 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 2312 வாக்குச் சாவடிகளுடன் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பணிகளுக்காக 4500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன்னர்.

கோவை மாநகராட்சியில் 181 வாக்குச்சாவடிகளும், நகராட்சிகளில் 112 வாக்குச் சாவடிகளும், பேரூராட்சிகளில் 143 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 436 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாகவே வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்கும் விதமாக மாதிரி வாக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் பல வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இல்லாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 663

0

0