அருந்ததியர் பிரிவினருக்கான உள் இடஒதுக்கீட்டை மாநில அரசு வழங்கலாம் : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

27 August 2020, 12:15 pm
Supreme_Court_UpdateNews360
Quick Share

டெல்லி : அருந்ததியர் பிரிவினருக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவீத உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடந்த 2011ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சேலத்தைச் சேர்ந்த ஜே. யசோதா கடந்த 2015ம் ஆண்டு மனு ஒன்றை போட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கு அதே ஆண்டில் 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான விசாரணையும் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த மாதம் 16-ந் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் இந்த வழக்கின் தீர்ப்பு காணொளி மூலம் வழங்கப்பட்டது. அதாவது, பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியர் பிரிவினருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Views: - 36

0

0