தீக்குளிப்பு அம்பலப்படுத்திய மிரட்டல் மோசடி? திமுக கூட்டணியில் குடுமிபிடி!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2021, 7:10 pm
Stalin House Suicide- Updatenews360
Quick Share

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை இரு கட்டங்களாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் அதிமுக சார்பில், அண்மையில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அதிமுக வழக்கு

அதில், “தேர்தல் பணிகளில் மத்திய பார்வையாளர்களையும் பாதுகாப்புக்கு துணை ராணுவ வீரர்களையும் ஈடுபடுத்த வேண்டும். முந்தைய திமுக ஆட்சி காலத்தில் 2006ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தற்போது 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதால் மீண்டும் வன்முறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற தகுந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் அதிமுகவின் கோரிக்கை குறித்து மாநில தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும்படி உத்தரவிட்டது.

Out of Amma's shadow: CM Palaniswami's rise to AIADMK's undisputed leader -  The Economic Times

அதாவது தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடக்கலாம் என்பதுதான் அதிமுக மனுவின் முக்கிய அம்சம். இதனை ஊர்ஜிதப்படுத்துவதுபோல் சில நிகழ்வுகளும் நடந்துள்ளன. 9 மாவட்டங்கள் தவிர, தமிழகத்தில் காலியாக இருக்கும் உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

மநீம அதிர்ச்சி

இந்த உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு ஆரம்பமே அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

Coimbatore (South) Election Result 2021 Live: Mnm Chief Kamal Haasan Loses  To Bjp'S Vanathi Srinivasan By 1,500 Votes

இதுதொடர்பாக அவர் கூறும்போது, “சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றிய 9-வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விண்ணப்பித்திருந்த பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர், உள்ளூர் திமுக பிரமுகர்களால் அச்சுறுத்தப்பட்டு வேட்புமனு திரும்பப் பெறப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை” என்று வேதனைப்பட்டிருந்தார்.

நாம் தமிழர் கட்சி வேதனை

தமிழகத்தின் 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ள சீமானின் நாம் தமிழர் கட்சிக்கோ சோதனை வேறு வடிவில் வந்துள்ளது.

Seeman Wiki, Biography, Age, Caste, Speech, Naam Tamilar Katchi -  wikimylinks

சீமான் கூறும்போது, “ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை திமுகவினர் மிரட்டி வருகின்றனர். பல இடங்களில் அவர்களை கடத்திச் சென்று வைத்தும் உள்ளனர். எங்களுக்கு பல்வேறு தொல்லைகளை கொடுக்கின்றனர். தேர்தல் முடிந்ததும் காண்ட்ராக்ட் பணி தருகிறோம், அரசு வேலை தருகிறோம் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களிடம் திமுகவினர் பேரமும் பேசுகின்றனர். ஆனால் எங்கள் வேட்பாளர்கள் எதற்கும் பணிய மாட்டார்கள். எங்களை கண்டு திமுவுக்கு ஏன் பயம் வருகிறது?வாருங்கள் தேர்தலில் மோதி பார்ப்போம்” என்று ஸ்டாலினுக்கு சவாலும் விட்டிருந்தார்.

எதிர்க்கட்சிகள் திமுக மீது குற்றச்சாட்டு

இப்படி எதிர்க்கட்சிகள் திமுக அரசு மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன் வைத்த நிலையில், தற்போது திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கே ஒரு சோதனை ஏற்பட்டிருக்கிறது. அது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டு முன்பாக வெளிப்பட்டு இருப்பதுதான் இதில் வேதனையான விஷயம்.

MK Stalin announces ₹39 crore memorial for DMK stalwart Karunanidhi

முதல்வர் வீட்டு முன் தீக்குளித்த நபர்

கடந்த 27-ம் தேதி காலை 9.45 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். அந்த சாலையில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பையெல்லாம் கடந்து சென்று, திடீரென தனது உடலில் டர்பன்டைன் எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். அப்போது அவர், “திமுகவினர் என்னை மிரட்டி உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட விடாமல் தடுத்து விட்டனர். எனக்கு நீதி கிடைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று முழக்கமும் எழுப்பியுள்ளார்.

பின்பு அலறியடித்தபடி முதலமைச்சரின் வீட்டை நோக்கி வேகமாக ஓடியிருக்கிறார். அப்போதுதான் போலீசார் சுதாரித்துக் கொண்டு அவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, 55 சதவீத தீக்காயங்களுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் அவரை பற்றி விசாரித்தபோது, திடுக்கிடும் பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தீக்குளித்தவர் மதிமுக நிர்வாகி

முதலமைச்சர் வீட்டுக்கு முன்பாக தீக்குளித்தவர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா ஜமீன் தேவர்குளம், காலனி தெருவைச் சேர்ந்த வெற்றிமாறன். மதிமுகவை சேர்ந்த அவர், தமிழ்நாடு பறையர் பேரவை என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

இவர், ஜமீன் தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்திருந்தார். அப்போதே மதிமுகவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.மேலும் திமுகவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், அவருடைய மனைவியும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியுமான கமலா மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வெற்றிமாறனை தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. அதேபோல் அவரது மனைவி சவுரியம்மாளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil Nadu Assembly Elections 2021 | MDMK to contest six seats in DMK  symbol - The Hindu

இந்த நிலையில்தான் வெற்றிமாறனின் வேட்பு மனுவை பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரிகள்
அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர். ஆளும் கட்சியில் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி பாலகிருஷ்ணன் தனது வேட்பு மனுவை நிராகரிக்க வைத்து விட்டதாக வெற்றிமாறன் கருதினார். இதனால் மனமுடைந்த அவர் தனக்கு நியாயம் கேட்டு முதலமைச்சர் வீட்டின் அருகே தீக்குளித்தும் உள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல்

இச் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மருத்துவமனையில் உயிருக்கு அபாயமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் வெற்றிமாறனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Man attempts to set himself ablaze outside Tamil Nadu CM Stalin's residence  | Cities News,The Indian Express

அப்போது வெற்றிமாறன் அவரிடம் , “ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாதபடி திமுகவினரும், மதிமுகவினரும் என்னை தடுத்துவிட்டனர். அதனால்தான் முதலமைச்சரிடம் எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை தெரியப்படுத்தும் விதமாக அவர் வீட்டு முன்பாக தீக்குளித்தேன்” என்று உண்மையை போட்டு உடைத்ததாக தெரிகிறது.

சூறாவளியை ஏற்படுத்திய தீக்குளிப்பு

இந்த நிலையில், தீக்குளித்த வெற்றிமாறன் குறித்து, தூத்துக்குடி மாவட்ட மதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, “வெற்றிமாறன் புகார் கூறியுள்ள பாலகிருஷ்ணன் ஏற்கனவே ஊராட்சித் தலைவராக இருந்தபோது, மத்திய, மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்றவர். அவரிடம், தனக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக வெற்றிமாறன் பேசிய ஆடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. அவருடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு கமலாவோ, பாலகிருஷ்ணனோ காரணமல்ல” என்று தெரிவித்தார்.

ஆனால் வெற்றிமாறன் தரப்பினரோ, “தேர்தல் அதிகாரிகளுக்கு பெரும் தொகை கொடுத்து எனது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வைத்துவிட்டனர்” என்று குற்றம்சாட்டுகின்றனர். இதனால் இந்த விவகாரம் தமிழக அரசியலில், பெரும் சூறாவளியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, “ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி செய்து வருகிறது. மக்கள் பிரச்சினைகளை எங்களுடைய வாசலுக்கே வந்து தெரிவிக்கலாம் எனக் கூறினர். ஆனால் இன்றைக்கு புகார் தெரிவிக்க வருபவர்கள் தீக்குளிக்கும் நிலைதான் இருக்கிறது. இது, திமுக ஆட்சியின் அவலநிலை”
என்று கிண்டலாக குறிப்பிட்டிருக்கிறார்.

Cannot join PM Modi Cabinet as 'uninvited guest': AIADMK minister D  Jayakumar | India News,The Indian Express

அரசியல் ஆர்வலர்கள் கருத்து

இதுபற்றி அரசியல் ஆர்வலர்கள் கூறும்போது “ஒருவர், முதலமைச்சர் கோட்டைக்கு செல்லும் நேரத்தை தெரிந்துகொண்டு அவர் வீட்டு முன்பாகவே தீக்குளிக்கிறார் என்றால் அது நிச்சயம் ஒரு சாதாரண பிரச்சனைக்காக இருக்க முடியாது. சம்பந்தப்பட்ட நபர் பலத்த போலீஸ் பாதுகாவலை யும் மீறி முதலமைச்சரின் வீட்டுக்கு முன்பாக சென்று இச்செயலில் ஈடுபட்டிருக்கிறார்.

அதனால் இப்பிரச்சினையின் வீரியத்தை புரிந்துகொள்ள முடிகிறது. வெற்றிமாறன் பணம் கேட்டு கிடைக்காததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா?அல்லது பாலகிருஷ்ணனால் மிரட்டப்பட்டாரா?. என்பதெல்லாம் போலீஸ் விசாரணைக்கு உட்பட்ட விவகாரங்கள். அதிலுள்ள உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டியது காவல்துறையின் கடமை.

எனினும், ஏற்கனவே, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி தலைவர்கள், ‘எங்களது வேட்பாளர்கள் மிரட்டப்படுகிறார்கள், வாக்கு சேகரிக்க விடாமல் தடுக்கப் படுகின்றனர், வெற்றி வாய்ப்புள்ளவர்கள் கடத்தப்படுகிறார்கள்’ என்ற கடுமையான குற்றச்சாட்டை ஆளும் கட்சி மீது வைத்துள்ளனர். அதனால் மாநில தேர்தல் ஆணையத்துக்கு தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்தவேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது.எவ்வித சிக்கலும் இன்றி உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பும் ஆகும்” என்று வலியுறுத்தினர்.

Views: - 233

0

0