இங்கிலாந்தில் நடைபெற உள்ள பருவநிலை மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு…!!

6 November 2020, 8:12 am
PM_Modi_Video_Conferance_UpdateNews360
Quick Share

இங்கிலாந்தில் நடைபெற உள்ள பருவநிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் புதிய பருவநிலை திட்டங்களை சர்வதேச அரங்கில் முன்வைக்க விரும்பும் உலக நாடுகளின் தலைவர்களுக்காக ‘கிளைமேட் ஆம்பிஷன் சம்மிட்’ எனும் பருவநிலை தொடர்பான மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வி ஷ்ரிங்களா இங்கிலாந்து வெளியுறவு துறை செயலாளர் பிலிப் பார்டனை லண்டனில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் மாநாட்டிற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இந்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அந்த மாநாடு அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Views: - 21

0

0