ஐபேக் நிறுவனத்தின் அடாவடி..! ஊழியர்களுக்கு கொரோனா..! ஊதியம் இல்லாமல் பணியாற்றும் கொடுமை

12 August 2020, 12:17 pm
Prashant_Kishor_UpdateNews360
Quick Share

சென்னை: கொரோனா ஒரு பக்கம் அனைவரையும் பாடாய்படுத்த, ஊழியர்களை சம்பளமின்றி வேலைவாங்கி கொண்டிருக்கிறது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்.

உலகமே கொரோனாவால் நிலைகுலைந்து போயிருக்கிறது. பெரியண்ணன் அமெரிக்கா கொரோனா தொற்றால் ஆடி போயுள்ளது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் அங்கீகரிக்கப்படாததால் பாதிப்புகள் எவ்வளவு என்று இதுவரை உறுதியாக தெரிகிறது.

இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. பாதிப்புகள், உயிர்பலிகள் என்பது அதிகமாகவே காணப்படுகிறது. தமிழகமும் இதில் தப்பவில்லை. அரசியல் களத்தையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. முக்கியமான அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் தலைவர்கள் என பாதித்து வருகிறது.

dmk_ stalin - updatenews360

தமிழக அரசியல் களத்திலும் கொரோனா அரசியல் என்பது பாடாய்படுத்தி வருகிறது. இதை பயன்படுத்தி அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி 2021ம் ஆண்டில் அரியணை ஏறிவிட வேண்டும் என்று ஸ்டாலின் பகீரதபிரயத்தனம் செய்து வருகிறார்.

அதற்காக பல கட்ட திட்டங்கள், அணிகள். குறிப்பாக, வடநாட்டு தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை இறக்கி உள்ளது. அதற்கான ஒப்பந்தம் 380 கோடியில் கையெழுத்தானது. கடந்த ஜனவரி மாதம் முதலே தமிழக அரசியல் களத்தில் பிகே அணி கால்பதிக்க ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட பிகே டீம் பிரிக்கப்பட்டு, உறுப்பினர்கள் களத்தில் இறக்கிவிடப்பட்டு உள்ளனர். சர்வேக்கள் எடுக்கப்பட்டன. உள் அரசியலையும் தாண்டி இந்த சர்வேக்கள் தாக்கம் தந்தன. கட்சியின் சீனியர்கள் அதிருப்தி அடைந்தனர் என்று செய்திகள் உலா வந்தன.

ஐபேக் நிறுவனத்தின் திட்டமான ஒன்றிணைவோம் வா என்பதை அப்படியே செயல்படுத்தினார் ஸ்டாலின். இதற்காக ஐபேக் நிறுவனத்தின் சார்பில் 100க்கான இளைஞர்கள் இறக்கி விடப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு சம்பளம் தராமல் ஐபேக் நிறுவனம் இழுத்தடிக்கிறது என்பது தான் அதிர்ச்சித் தகவல்.

அதில் பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: நான் ஐபேக் ஊழியர். கொரோனா காலத்திலும் பணி செய்யுமாறு வற்புறுத்துகின்றனர். எங்களது சம்பளத்தை தரவில்லை. ஆனால் திமுக இதில் கண்டுகொள்ளவே இல்லை. சமூக நீதி பேசி டுவிட் போடும் ஸ்டாலின் இதை பற்றி வாயே திறப்பது கிடையாது.

இது இப்படி இருக்க, அலுவலகம் வந்து செல்ல ஊழியர்களுக்கு இ பாஸ் தரவில்லை. விதிகளை மீறி வாருங்கள் என்று கட்டாயப்படுத்தப்படுகிறோம். அதை ஐபேக் நிறுவனமானது எங்களுக்கு மெயிலில் தெரிவித்து உள்ளது. சென்னை அலுவலகம் வந்து சம்பளம் பெற்றுக் கொள்ளலாம்.

எங்களுடன் பணியாற்றும் 40 பேரில் 3 பேருக்கு கொரோனா பாசிட்டிவ். மற்றவர்களின் டெஸ்ட் ரிசல்ட் வரவில்லை. ஆனாலும் அலுவலகம் வர வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் கதறுகின்றனர்.

இந்த தகவல் அரசியல் களத்தில் பெரும் விமர்சனங்களை எழுப்பி வருகிறது. கொரோனா நிதியை இந்த அரசாங்கம் தரவில்லை என்று ஊர்தோறும் ஸ்டாலின் முழங்கி வருகிறார். ஆனால் அவரது கட்சி ஒப்பந்தம் போட்டுள்ள நிறுவனத்திலோ ஊழியர்கள் பரிதாபகர நிலையில் உள்ளனர், கொரோனா பாதிப்பு, ஊதியம் இல்லாமை என்று பாடுபடுகின்றனர். அவர் முதலில் இதை சரி செய்து…. மக்கள் பணியாற்றட்டும் என்று கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.