சனாதனத்தை பள்ளிகளில் சொல்லிக் கொடுப்பது தவறா? இது ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி : பொங்கும் கனல் கண்ணன்!
Author: Udayachandran RadhaKrishnan12 செப்டம்பர் 2024, 1:09 மணி
புதுச்சேரியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்ற இந்து முன்னணி நிர்வாகியும் பாஜக ஆதரவாளருமான திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், இந்துக்களின் ஒற்றுமைக்கான அடையாளமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் உள்ளது. தமிழகத்தை போல் அல்லாமல் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு எந்த கட்டுப்பாடும் அரசு விதிக்கவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தமிழகத்தில் திடீரென ஆன்மீகம் பேசிய ஒருவரை 100 பேர் கைது செய்ய வருகிறார்கள்,ஒரு குற்றவாளியை பிடிப்பது போல் வருகிறார்கள்.
ஆன்மீகத்துக்கு எதிரான ஆட்சியாக தமிழக அரசு உள்ளது. அதனால்தான் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் என கனல் கண்ணன் தெரிவித்தார்.
பள்ளியில் ஆன்மீகம் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்பது தவறு. இவ்வளவு நாள் பள்ளியில் அப்படித்தானே சென்றுள்ளது.
ரகுபதி ராஜாராம் என காந்தி சொல்லிதானே பாடுகிறோம். அதை இப்பொழுது தடுக்க முடியுமா …ஆன்மீகம் என்பது சனாதானம்.. சனாதானம் என்பது வாழ்வியல் முறை அதை பள்ளியில் படிப்பது என்ன தவறு என்றார்.
நிறைய பள்ளிகளுக்கு நடுவே தேவாலயங்கள் உள்ளன இதை யாருமே கேட்கவில்லை கேட்டால் தான் மக்கள் திருந்துவார்கள் என கனல் கண்ணன் தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்திக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
தமிழர்களுக்கு இந்து உணர்வு வர வேண்டும் வாழ்த்து தெரிவிக்காதவர்களுக்கு தான் நாம் ஓட்டு போடுகிறோம் என்ற உணர்வு இந்து மக்களுக்கு வரவேண்டும் என கனல் கண்ணன் கூறினார்.
விஜய் கட்சி ஆரம்பித்து இருப்பதை வரவேற்ற அவர், தமிழகத்திற்கு நல்லது நடந்தால் குறிப்பாக இந்துக்களுக்கு நல்லது நடந்தால் அதனை நல்ல விஷயமாக ஏற்றுக்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஆசியாவிலேயே உயரமான விநாயகர் சிலை.. 2 டன் மலர்களால் அலங்கரித்து, 16 வாசன திரவியங்களால் பூஜை!
0
0