உடல் நலமின்றி இருக்கும் ஆதரவாளரை சந்தித்து நலம் விசாரித்து மருத்துவ செலவுக்கு பண உதவி வழங்கினார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.
முன்னாள் மத்திய உரத்துறை அமைச்சராகவும், கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்தே அமைதியாக இருந்து வருகிறார். தொடர்ந்து தனது ஆதரவாளர்களின் இல்லத்திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்று தனது ஆதரவாளர்கள் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த திமுக ஆட்சியின் போது மதுரை மாநகராட்சி முன்னாள் வடக்கு மண்டல தலைவராகவும், மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளருமான இசக்கி முத்து என்பவர் விபத்து ஒன்றில் சிக்கி உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் தனது ஆதரவாளரான இசக்கி முத்துவை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை கொடிக்குளம் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து இசக்கி முத்துவின் மருத்துவ செலவுக்கு பண உதவி அளித்தார்.
தொடர்ந்து மு.க.அழகிரியிடம் மீண்டும் மத்திய அமைச்சராக வர வாய்ப்புள்ளதா, மீண்டும் திமுகவில் இணைய வாய்ப்பு உள்ளதா, உதயநிதியும், துரை தயாநிதியும் இணைந்து செயல்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மு.க.அழகிரி எந்த பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.