திமுகவிற்கு வாக்களிக்கும் இஸ்லாமியர்களை அல்லா மன்னிக்க மாட்டார் : ஜே.எம். பஷீர்..!!

29 January 2021, 6:12 pm
jm bahsir - updatenews360
Quick Share

சென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்கும் இஸ்லாமியர்களை அல்லா மன்னிக்கவே மாட்டார் என்று அதிமுக சிறுபான்மையினர் பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம். பஷீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியிருப்பதாவது :- ‌சிறுபான்மை மக்களின் நண்பன், பாதுகாவலன் என தமிழகம் முழுவதும் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் எனக் கூறி வரும் ஸ்டாலினுக்கு நியாபகம் மறதி அதிகம்.

இந்த சூழலில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், சிறுபான்மையின மக்களுக்கும் ஒரு குட்டி கதையை சொல்கிறேன்.

1946ம் ஆண்டு தமிழகத்தின் சென்னை மாகாணத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில், 140 இடங்களைப் பெற்று காங்கிரஸ் அரசு அசுர பலத்தில் ஆட்சியமைத்தது. காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்டு சுமார் 29 இடங்களை வென்று, இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சி என்னும் இஸ்லாமிய கட்சி எதிர்கட்சியாக இருந்தது. 1967ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து, அண்ணாவின் திமுகவை ஆட்சியில் அமர வைத்தது இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சி. அண்ணாவும், காயிதே மில்லத்தும் சகோதரர்கள் போல் வாழ்ந்து வந்தனர்.

பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரியவராக நடித்து குறுக்கு வழியில் முதலமைச்சரானவர் கருணாநிதி.

தற்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை குறுக்கு வழியில் முதலமைச்சரானார் எனக் கூறி வரும் முக ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் இதை நியாபகம் கொள்ள வேண்டும். முதலமைச்சர் ஆனவுடன் கருணாநிதியின் குள்ளநரி வேலையை காட்ட ஆரம்பித்தார்.

1972ம் ஆண்டு காயிதே மில்லத்தின் மறைவை பயன்படுத்தி, இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக இருந்த முஸ்லீம் லீக் என்னும் மாபெரும் கட்சியை உடைத்து சின்னாபின்னமாக்கினார் கருணாநிதி. இதுதான் இஸ்லாமியர்களுக்கு அவர் செய்த முதல் பச்சை துரோகம்.

இந்தியன் முஸ்லீம் லீக் கட்சியை இரண்டாக உடைத்து, முஸ்லீம் லீக் கட்சி, தேசிய லீக் கட்சியையும் உருவாகச் செய்தார். இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக இருந்தால், ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்துக் கொள்வார்கள். தமிழகத்தில் ஆட்சியை நிர்ணயம் செய்யும் அளவிற்கு வளர்ந்து விடுவார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இஸ்லாமிய சமூகத்தை அன்றே இரண்டாக உடைத்தார் கருணாநிதி. இது மிகப்பெரும் சதி. வெள்ளைக்காரன் நம்மிடம் செய்த பிரித்தாளும் சூழ்ச்சியை இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர் பயன்படுத்தினார்.

சிறுபான்மை மக்களின் துரோகி, விரோதி, எதிரி… யார் என்றால், அது திமுக மற்றும அதன் தலைவர் கருணாநிதிதான்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் ஆட்சியை நடத்தி வரும் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அதிமுகதான் இஸ்லாமியர்களுக்கான கட்சி அதிமுக. இந்தக் கட்சியை தோற்றுவித்தவர் எம்ஜிஆர். அன்றே அவர் குல்லா போட்டார். திமுகவினரை போல போலியாக ஏமாற்ற குல்லா போடவில்லை.

2021 சட்டப்பேரவை தேர்தலில் இஸ்லாமியர்கள் உதயசூரியனுக்கு வாக்களித்தால், காயிதே மில்லத்திற்கும், அவர் செய்த தியாகத்திற்கும் செய்யும் மிகப்பெரிய துரோகம். அல்லா உங்களை சும்மா விட்டார். நம்மை பிரித்து துரோகம் செய்தது திமுகதான். இன்று மட்டுமல்ல என்னைக்குமே வாக்களிக்கக் கூடாது.

அதிமுகவை வரும் சட்டப்பேரவை தேர்தலில் 3வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க, சிறுபான்மை மக்கள், காகியத் மில்லத்தின் வாரிசுகளாகிய நாம் துணை நிற்போம்.

ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் சிறுபான்மை மக்களாகிய நம்மை தனது இரண்டு கண்களாக பார்க்கின்றன். சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக இருக்கின்றனர். இஸ்லாமிய மக்கள் சிதறுண்டு கிடக்காமல், ஒரு அணியில் திரளுவோம். பச்சை துரோகம் செய்த திமுகவை விரட்டியடிப்போம், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0