பாலமேட்டில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகள்…!!

Author: Aarthi Sivakumar
15 January 2022, 8:44 am
Quick Share

மதுரை: உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டி வருகிறது. நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகமாக நடந்து முடிந்தது. கொரோனா பரவலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தனர். முன்னதாக, அமைச்சர்கள், மற்றும் மதுரை ஆட்சியர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். மகாலிங்க சுவாமி மடத்து காளை முதல் காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது. இதனை வீரர்கள் யாரும் அடக்க கூடாது என அறிவிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டிக்காக அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது. போட்டிக்கான முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 150 பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

மாலை 4 மணி வரை போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளுக்கும் கார், இருசக்கர வாகனம், பீரோ, தங்கம், வெள்ளி நாணயங்களும் வழங்கப்பட உள்ளது.

Views: - 162

0

0