ஜம்மு – காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை : பயங்கரவாதி என்கவுண்டர்..!!!

6 November 2020, 10:59 am
Quick Share

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் – பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இந்தியா – பாகிஸ்தான் எல்லையான ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் இந்த பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினரும் தொடர்ந்து வேட்டையாடி வருகின்றனர்.

அந்த வகையில், பாம்பூர் என்னும் லால்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று தேடுதல் வேட்டை நடத்திய போது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடானது இன்று காலை வரை நீடித்த நிலையில், அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: - 23

0

0