ஜெ.,வின் 4ம் ஆண்டு நினைவு தினம் : 5ம் தேதி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். நினைவிடத்தில் மரியாதை

30 November 2020, 7:43 pm
Quick Share

சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரும் 5ம் தேதி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக மக்கள்‌ அனைவரது இதயங்களிலும்‌ நிரந்தரமாக வீற்றிருக்கும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக நிரந்தரப்‌ பொதுச்‌செயலாளர்‌ இதய தெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ நம்மையெல்லாம்‌ ஆற்றொணாத்‌ துயரத்தில்‌ ஆழ்த்திவிட்டு அமரர்‌ ஆகிய நாள்‌ 5.12.2016.

காலத்தால்‌ அழியாத புரட்சிகரமான திட்டங்களால்‌ தமிழ்‌ நாட்டு மக்களின்‌ வாழ்க்கையில்‌ பெரும்‌ மாற்றங்களையும்‌, எழுச்சியையும்‌ ஏற்படுத்திய புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களின்‌ புகழ்‌ காலமெல்லாம்‌ நிலைத்திருக்கும்‌. தன்னலம்‌ கருதாது, தமிழ்‌ நாட்டு மக்களுக்காக தன்‌ அறிவையும்‌, உழைப்பையும்‌ அர்ப்பணித்துப்‌ பாடுபட்ட நம்‌ அன்பு அம்மா அவர்களுக்கு புகழ்‌ அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு கழகத்தினரின்‌ இன்றியமையாத கடமையாகும்‌.

இதய தெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அற்ரை அவர்களின்‌ 4-ஆம்‌ ஆண்டு நினைவு நாளான 5.12.2020 சனிக்‌ கிழமை காலை 10.45 மணியளவில்‌. சென்னை, மெரினா கடற்கரையில்‌ அமைந்துள்ள புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களுடைய
நினைவிடத்தில்‌, மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்‌ மலர்‌ வளையம்‌ வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள்‌.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொது நிகழ்ச்சிகளில்‌ 200 பேர்களுக்கும்‌ மேற்படாத வகையில்‌ மக்கள்‌ கலந்துகொள்ளலாம்‌ என்று அரசு அறிவித்துள்ள நிலையில்‌, இந்நிகழ்ச்சியில்‌ பங்கேற்கும்‌ தலைமைக்‌ கழக நிர்வாகிகள்‌, மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌, மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌, கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ அனைவரும்‌, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும்‌ வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றியும்‌, சமூக இடைவெளியை கடைப்பிடித்தும்‌, முகக்‌ கவசம்‌ அணிந்தும்‌, இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும்‌ பங்குபெறுமாறு கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

மாண்புமிகு அம்மா அவர்களின்‌ நினைவு நாளான 5.12.2020 அன்று, புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களைப்‌ பற்றிய நினைவுகளை நெஞ்சில்‌ சுமந்துள்ள, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சிப்‌ பகுதி, வட்ட அளவில்‌, கழகத்தில்‌ பல்வேறு நிலைகளில்‌ பணியாற்றி வரும்‌ நிர்வாகிகள்‌ மற்றும்‌ கழகத்‌ தோழர்கள்‌ அனைவரும்‌ மன ஆறுதல்‌ பெறும்‌ வகையில்‌, அனைத்துப்‌ பகுதிகளிலும்‌ ஆங்காங்கே புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களின்‌ திருஉருவப்‌ படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. இதற்கான
ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ செய்திட வேண்டும்‌ என்றும்‌
கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

மேலும்‌, கழக அமைப்புகள்‌ செயல்பட்டுக்‌ கொண்டிருக்கும்‌ புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான்‌ உள்ளிட்ட பிற மாநிலங்களிலும்‌, 5.12.2020 அன்று ஆங்காங்கே புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களின்‌ திருஉருவப்‌ படங்களை வைத்து, மலர்‌ அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0