தலைவி படத்திற்கு தடை கோரிய வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Author: Babu
15 October 2020, 1:58 pm
Quick Share

சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட தலைவி படத்திற்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை வெளியிட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய தலைவி படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார்.

அதேவேளையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பிலும், கவுதம் மேனனி இயக்கத்திலும், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று வெப் சீரியஸ் எடுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் தலைவி மற்றும் குயின் வெப் சீரியஸுக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தப் படங்களில் தனது தந்தையை தவறாக சித்தரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஜெ.தீபாவின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த தலைவி படக்குழுவினர், படத்தின் கதையை முழுமையாக தெரியாமல், வீண் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக கூறியது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நவ.,10 மற்றும் 11 தேதிகளில் முழுமையாக விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Views: - 68

0

0