ஜெயலலிதா நினைவிடம் 27ம் தேதி திறப்பு : போயஸ் கார்டன் நினைவில்லமும் பொதுமக்களின் பார்வைக்கு திறக்க முடிவு..!!

19 January 2021, 5:56 pm
eps - jayalalitha - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் 27ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரீனா கடற்கறையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்து விட்ட நிலையில் , திறப்பு விழாவிற்கு ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில், ஜெயலலிதாவின் நினைவிடம் 27ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டப்பேரவை தலைவர், துணைத் தலைவர், எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதே நாளில், அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லமும், மக்களின் பார்வைக்காக திறந்து விடப்பட இருக்கிறது. இதற்கான பணிகளும் பொதுப் பணித்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சசிகலா சிறையில் இருந்து வருவதாக வெளியாகியுள்ள தேதியான 27ம் தேதி, ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0