அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி : 8 பாக்., வீரர்கள் உயிரிழப்பு..!!

13 November 2020, 5:08 pm
Army_Operation_UpdateNews360
Quick Share

ஐம்மு – காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் கொடுத்த தக்க பதிலடியில் 8 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியான ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்கதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடியை கொடுத்து வருகிறது. மேலும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதற்காக, எல்லையில் எந்நேரமும் இந்தியா ராணுவம் தயார் நிலையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில், 8 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதேவேளையில், இந்திய எல்லை பாதுகாப்புப் படையை சேர்ந்த துணை ஆய்வாளர் ராகேஷ் தோவல் உள்பட 3 வீரர்களும், பொதுமக்கள் 3 பேரும் என 6 பேர் ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்தனர். அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடியை கொடுத்து வருகின்றனர்.

Views: - 21

0

0