தண்ணீர் கேட்ட பத்திரிக்கையாளரை சாவச் சொன்ன அரசு அதிகாரி : கருணாநிதி படதிறப்பு விழாவில் அவமதிப்பு..!!

Author: Babu Lakshmanan
3 August 2021, 3:43 pm
karunanidhi photo - updatenews360
Quick Share

சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படதிறப்பு நிகழ்ச்சியில் தண்ணீர் கேட்ட பத்திரிக்கையாளரை, போயி சாவுங்கள் என அரசு அதிகாரி கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதியின் திருவுருவப்பட திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். குடியரசு தலைவரின் பாதுகாப்பு கருதி, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் சட்டப்பேரவை வளாகத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதேவேளையில், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் 3 மணிநேரத்திற்கு முன்னதாகவே அவரவர் பகுதிக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, நிகழ்ச்சி தொடங்குவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்னதாகவே பத்திரிக்கையாளர்கள் அங்கு குவிந்தனர். அப்போது, பத்திரிக்கையாளர்களுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டதால், பேரவையின் சார்புச் செயலாளர் பால சீனிவாசனிடம் தண்ணீர் கேட்டுள்ளனர்.

இதனை கேட்ட அவர் தண்ணீர் ஏற்பாடு செய்து கொடுக்காமல், அதற்கான ஏற்பாடுகள் எதுவும் கிடையாது என்றும், தண்ணீர் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள் எனக் கூறிவிட்டார். அப்போது, நீண்ட நேரம் காத்திருக்கிறோம், எங்களின் அவசரத்திற்கு என்ன செய்வது? என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு “செத்தால் சாவுங்கள் கவலை இல்லை” என்று ஆணவத்தோடு கூறியுள்ளார்.

இது தண்ணீர் கேட்ட பத்திரிக்கையாளர்களை மட்டுமல்லாமல், அங்கிருந்த காவல்துறையினரையும் மன வேதனை அடையச் செய்தது. குடியரசு தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அடிப்படை விஷயமான குடிதண்ணீரை கேட்டது ஒரு குற்றமா..? எனக் கேட்டுள்ளனர்.

மேலும், பத்திரிக்கையாளர்களுக்கு முன்களப் பணியாளர்கள் என்ற கவுரத்தை வெறும் வாயாலளவில் கொடுத்து விட்டு, இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகளே தங்களை இழிவுபடுத்துவது எந்த மாதிரியான செயல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என பத்திரிக்கை சங்கத்தினர் விமர்சித்துள்ளனர்.

Views: - 358

0

0