‘ம***… நான் யாருன்னு உங்க அப்பங்கிட்ட கேளு.. செஞ்சிருவேன்’ : உதயநிதியின் மிரட்டலுக்கு பத்திரிக்கையாளர் எச்சரிக்கை..!!

Author: Babu
5 October 2020, 2:10 pm
udhayanidhi - updatenews360
Quick Share

சென்னை : திமுகவின் முகமாக மாறி வரும் உதயநிதி ஸ்டாலினை, பத்திரிக்கையாளர் ஒருவர் தரக்குறைவாக பேசிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் கட்சிகளின் செயல்களை பொதுமக்களும், பத்திரிக்கையாளர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். திமுகவைப் பொறுத்தவரையில், தற்போது ஸ்டாலினை விட அவரது மகன் உதயநிதியின் கையே ஓங்கி உள்ளது. அவர் கைகாட்டு நபர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்பட்டு வருவதால், மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

எனவே, உதயநிதியும் கட்சியின் இளைஞரணி செயலாளர் என்பதை மறந்து, திமுக தலைவர் போல நடந்து கொள்வதாக, அவரால் அதிருப்தியடைந்த திமுக நிர்வாகிகளே விமர்சித்து வருகின்றனர்.

stalin-udhayanidhi-updatenews360

அப்படியிருக்க, திமுகவின் ஆதரவாளராக இருந்து வரும் பத்திரிக்கையாளரை மிரட்டி, நல்ல செமத்தையாக வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் உதயநிதி.

திமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர், திமுகவிற்கு ஆதரவாகவும், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்தும் வருகிறார். இவரது டுவிட்டுகளை பெரும்பாலும் திமுகவினரே பகிர்ந்து வருவதுண்டு.

இந்த நிலையில், உதயநிதியை கடுமையான வார்த்தைகளால் சவுக்கு சங்கர் திட்டியிருப்பது, திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதி பற்றி அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “கலைஞர் கிட்ட அரசியல் பண்ணுனவன் டா மயிரே உதயநிதி, நான் யாருன்னு உங்க அப்பா கிட்ட கேளு. இந்த மெரட்டுற வேலை மயிரை இனி பண்ணாத. சுஜய், ரத்தீஷ், கார்த்தி, எல்லாரையும், பாத்துக்குட்டுத்தான் இருக்கோம். செஞ்சுருவேன். மூடிட்டு இரு. ரத்தீஷ் அண்ணன் யாருன்னு எனக்கு தெரியாதா ?,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சவுக்கு சங்கரின் இந்த பதிவுக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், தீவிர திமுக விசுவாசியாக தன்னை வெளிப்படுத்தி வந்த பத்திரிக்கையாளரே, இதுபோன்று கடுமையான வார்த்தைகளால் கட்சியின் தலைவர் மகனை திட்டுவதற்கு காரணம் என்ன..? ஏன், சவுக்கு சங்கரை உதயநிதி ஸ்டாலின் மிரட்டினார்..? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

ஆதங்கத்தில் கட்சித் தலைவரின் மகன் என்று பாராமல் கடிந்து கொண்டுள்ள சவுக்கு சங்கர், விரைவில் தான் இப்படி பேசியதற்கான காரணத்தையும் வெளியிடுவார் என்று திமுகவினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Views: - 59

0

0