பொங்கல் பரிசு ரூ.5000 கேட்டவரு CM ஸ்டாலின்.. எல்லாம் நேரம் தான் ; திமுக அரசு மீது கே. பாலகிருஷ்ணன் வைத்த எதிர்பார்ப்பு!!

Author: Babu Lakshmanan
30 December 2022, 2:06 pm
Quick Share

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த குற்றவாளிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியலினத்து மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் மனிதக் கழிவுகளை கொட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களோடு மக்களாக கண்டனம் தெரிவித்து, காவேரி நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது குற்றவாளிகளை உடனடியாக தமிழக அரசு கைது செய்ய வேண்டும், இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே பாலகிருஷ்ணன் பேசியதாவது:- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்தது என்பது மிகவும் கண்டனத்துக்குரியது. காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். சம்பவம் நடைபெற்று சிறிது நேரத்திலேயே மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிழலில் சென்று ஆய்வு செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை பாராட்டுக்குரியது.

தற்போதும் தமிழகத்தின் பல பகுதிகளில் பட்டியல் எடுத்து மக்களை கோவிலுக்குள் அனுமதி மறுப்பது, இரட்டைக் குவளை முறை ஆகியவை இன்றும் நடைமுறையில் உள்ளது.

உங்கள் பரிசை தொகுப்பில் கரும்பு இல்லாமல் இருந்தது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் விளைவாக, தற்போது தமிழக அரசு பொங்கல் பரிசு தொகையுடன் முழு கரும்பும் கொடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளது, வரவேற்கத்தக்கது. பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு கரும்பு கொள்முதல் செய்வதற்கு அறிவித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக படித்து ஆராய்ந்து, பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த அறிவிப்பு குறித்து தெளிவுபடுத்தும்.

தமிழக ஆளுநர் ஆளுநராக அவர் செயல்படவில்லை. ஆர்எஸ்எஸ் நிர்வாகியாக தான் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் தமிழகத்திற்கு தேவையில்லை என்று எம்பிக்கள் ஜனாதிபதியிடம் மனு அளித்தனர். மற்ற அரசியல் கட்சிகளும் இதையே தான் வலியுறுத்துகின்றன. அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமரின் தாயார் மறைவு என்பது மிகவும் வருத்தத்துக்குரியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய இரங்கல்களை பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிரச்சனை என்பது ஓராண்டுக்கு முன்பு வந்தது கிடையாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சனையானது தொடர்ந்து கொண்டுள்ளது. ஊதிய முரண்பாடு கலை வேண்டும் என்று பல கட்ட போராட்டங்களை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

அப்போது உள்ள இருந்த அரசு இதற்கு நடவடிக்கை எடுக்காததன் விளைவுதான் இன்று வரை போராட்டம் தொடர்கிறது. அரசு இந்த போராட்டங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகை என்பது கொரோனாவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறினார். ஆனால், தற்போது பொதுமக்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர். இருப்பினும் நிதி நெருக்கடி காரணமாக தமிழக அரசு இந்த ஆண்டு ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. அடுத்த ஆண்டு கூடுதலாக பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முதல்வர் பொங்கல் பரிசு தொகை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம், எனக் கூறினார்.

Views: - 437

0

0