இந்து மத விவகாரங்கள் தொடர்பாக சங்கராச்சாரியார்கள் தான் கருத்து கூற முடியுமே தவிர பாஜகவினர் கூற முடியாது என்று திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.
திருச்சி கே கே நகர் பகுதியில் உள்ள பெரியார் மணியம்மை பள்ளியில் மற்றும் நாகம்மை ஆசிரியை பயிற்சி நிறுவனத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி பங்கேற்றார்.
பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட பொங்கலை கி.வீரமணி மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கினார். பின்னர் மாணவ மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கீ.வீரமணி கூறியதாவது :- ராமர் கோவில் திறப்பு விழாவில் இண்டியா கூட்டணியை சேர்ந்த பெரும்பாலான கட்சிகள் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். பக்தி என்பது அவரவர் தனிச்சொத்து. ஆனால் பா.ஜ.க வினர் அதை அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள். கட்டி முடியாத கோவிலை பிரதிஷ்டை செய்ய கூடாது என 4 சங்கராச்சாரியார்கள் கூறியுள்ளார்கள். இந்து மத விவகாரங்கள் தொடர்பாக சங்கராச்சாரியார்கள் தான் கருத்து கூற முடியுமே தவிர பாஜகவினர் கூற முடியாது.
பாஜகவை எதிர்ப்பவர்கள் சனாதான விரோதிகள், இந்து மத விரோதிகள் என கூற கூறும் பாஜகவினர், தற்பொழுது சங்கராச்சாரியார்களை பார்த்து அவ்வாறு கூறுவார்களா? முடிந்தால் பா.ஜ.கவினர் அதை கூறட்டும். இல்லையென்றால் அவ்வாறு மற்றவர்களை கூறுவதை நிறுத்த வேண்டும். தேர்தல் வரக்கூடிய சூழலில் தற்பொழுது பாஜகவினர் ராமனையே வேட்பாளராக நிறுத்துகிறார்கள். ராமன் ஒருபோதும் வேட்பாளராக கூடாது.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி திஹாருக்கு போவார் என்று கூறுகிறார். எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஜெயிலுக்கு போவார் என கூறுகிறார். ஸ்டாலின் மட்டுமே கோட்டைக்கு போவார். இரண்டு பேருமே கோட்டைக்கு செல்வேன் என கூறாமல் ஜெயிலுக்கு செல்வேன் என கூறி வருகிறார்கள். ஆண்டிக்கு கூட மடம் இருக்கிறது. ஆனால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு அது கூட இல்லை. அவருக்கு இடம் எங்கும் இல்லை. எங்கு போவது என தெரியாமல் நின்று கொண்டிருக்கிறார்.
துணை முதல்வராக உதயநிதி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- அதனை அறிவிப்பவர்கள் அறிவிக்க வேண்டும், அவருக்கு தகுதி இருக்கா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியவர் முதல்வர்.
அமைச்சர்கள் நியமனத்தில் இது போன்ற செயலில் ஆளுநர் ஈடுபட்டு மூக்கு உடைபட்டு இருக்கிறார். அவருடைய பணியை சிறப்பாகவும், அடக்கமாகவும் செய்து வருகிறார். அதனால் அவர் அனைத்து தகுதிகளையும் பெற்றவர், என தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.