300 அடி பள்ளத்தில் பாறைகள் சரிந்து விழுந்து 3 பேர் பலி… காப்பாற்ற கோரி கதறிய தொழிலாளி… கல்குவாரி உரிமையாளர் கைது : நிவாரணம் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2022, 2:13 pm
Kal Quary Accident - Updatenews360
Quick Share

திருநெல்வேலி மாவட்டத்தில் தருவை கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று இரவு 11.30 மணி பாறை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 3 ஜேசிபி ஆபரேட்டர்கள் 2 லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர் ஒருவர் என மொத்தம் 6 ஊழியர்கள் சிக்கிய நிலையில்,இரண்டு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி, திருநெல்வேலியில் இருந்து ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டு, அதன் உதவியுடன் லாரி, ஜேசிபி மீது விழுந்த பாறைகள் அகற்றப்பட்டு மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மீண்டும் திடீரென பாறை சரிவு ஏற்பட்டதால் ஆட்சியரின் உத்தரவின்பேரில் மீட்புப்பணி நிறுத்தப்பட்டு தீயணைப்பு வீரர்கள் குவாரிக்கு மேலே வந்துள்ளனர்.

இதனால், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க அரக்கோணத்தில் இருந்து தேசிய மீட்புப்படையினர் வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, நேற்று இரவு முதல் “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று விபத்தில் சிக்கிய ஒருவர் கத்தி கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,குவாரியின் உரிமையாளர் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார். குவாரியில் பாதுகாப்பு வழிமுறைகள் ஏதும் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதால் குவாரியின் உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,மேலும்,அவரது மகனும் கைது செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியது.

இந்நிலையில்,கல்குவாரி விபத்தில் காயமடைந்து மீட்கப்பட்ட முருகன்,விஜய்க்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும்,பாறை சரிந்ததில் பள்ளத்தில் சிக்கியுள்ள மேலும் நான்கு நபர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம்,மீட்புப்பணியை துரிதப்படுத்த அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் விபத்து நடைபெற்ற பகுதிக்கு நேரில் செல்லவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

Views: - 621

0

0