கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் திடீர் திருப்பம் ; நைட்டி அணிந்து வந்த 3 பெண்கள்… வெளியானது புதிய ஆதாரம்…!!

Author: Babu Lakshmanan
3 August 2022, 9:13 pm
Quick Share

கள்ளக்குறிச்சி கனியாமூர் பிளஸ் டூ மாணவி உயிரிழந்த பிறகு அங்கிருந்து தூக்கிச் சொல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் ஸ்ரீ சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில், கடந்த மாதம் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு படிக்கும் ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் மற்றும் மாணவர் அமைப்பு போராட்டத்தில் வெடித்த வன்முறையால், கடந்த மாதம் 17ஆம் தேதி பள்ளி முழுவதும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. இதனையடுத்து, பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வாகனங்கள், மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உட்பட பலர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதுடன், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன.

ஸ்ரீமதியின் பெற்றோர் ராமலிங்கம் மற்றும் தாயார் செல்வி கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்ற உத்தரவின்படி இரண்டு முறை மாணவி உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டு, சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி மாணவி உடல் அடக்கம் செய்யப்பட்டன.

இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளியின் முதல்வர் சங்கரன் சிவசங்கரன், பள்ளியின் கணித ஆசிரியர் கீர்த்திகா, பள்ளியின் வேதியல் ஆசிரியர் ஸ்ரீ பிரியா உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் வருகின்ற 10ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. மேலும், பெற்றோர்கள் ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது விசாரணையும் வருகின்ற பத்தாம் தேதி நடைபெற உள்ளன.

இந்த நிலையில், மாணவியின் உயிரிழப்பதற்கு முன்பு பள்ளியில் மாணவி வகுப்பறையில் நடந்து செல்லும் வீடியோ முதலில் வெளியாகி உள்ளன. அதனைத் தொடர்ந்து மாணவி பள்ளி வளாகத்தில் மாடியில் ஏறிச் சொல்லும் வீடியோவும் இரண்டாவது வீடியோவாக வெளிவந்தன.

இந்த நிலையில், தற்பொழுது மாணவி இறந்ததற்கு பிறகு கடந்த 13ஆம் தேதி காலை 5:30 மணி அளவில் பள்ளியின் வாட்ச்மேன் மண்ணாங்கட்டி மற்றும் உடன் நைட்டி அணிந்த மூன்று பெண்கள் மாணவியை தூக்கிச் செல்லும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இந்த வீடியோ யார் மூலமாக பரப்பப்பட்டது என்று கேள்வி எழுந்த வண்ணம் உள்ளன. காவல்துறை சிபிசிஐடி விசாரணை இருக்கும் பொழுது நாங்கள் எந்த வீடியோவும் வெளியிடவில்லை. இது முழுக்க முழுக்க பள்ளி சார்ந்த நபர்களால் வெளியிடப்பட்டதா…? இல்லை பள்ளி வளாகத்தை சூறையாடப்பட்ட நாள் அன்று அங்கிருந்து திருடி செல்லப்பட்ட ஹார்ட் டிஸ்க்கில் இருந்து எடுக்கப்பட்டதா..? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பான மூன்றாவது வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

Views: - 701

1

0