திமுக கொடி கம்பம் நடும் போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலி : அரசியல் கட்சிகளுக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை..!!

Author: Babu Lakshmanan
23 August 2021, 1:56 pm
Quick Share

விழுப்புரம் அருகே திமுக கொடிக்கம்பம் நடும் போது மின்சாரம் தாக்கிய சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உதவிக்காக பக்கத்து வீட்டில் உள்ளவரின் 13 வயது மகன் தினேஷ் என்ற சிறுவனை அழைத்து சென்றுள்ளார். அப்போது கட்சிக் கம்பம் ஊன்றியபோது உயர்மின் கம்பி உரசி சிறுவன் தூக்கி வீசப்பட்டான்.

இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானான். இது குறித்து சிறுவனின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிறுவனின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் 13 வயது சிறுவனை தொழில் செய்ய அழைத்து சென்ற வெங்கடேசனிடம் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, திமுக நிகழ்ச்சிக்காக கொடி கட்டச் சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிறுவன் பலியான சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கொடிக்கம்பங்கள் நடும் பணிக்குச் சென்ற 13 வயது சிறுவன் பலியான சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது. கொடிக்கம்பங்களும், பேனர்களும், அலங்கார வளைவுகளும் தொடர்ந்து உயிர்களைக் காவுவாங்குகின்றன. இந்தக் கீழ்மையில் இருந்து அனைத்துக் கட்சிகளுமே விடுபட வேண்டும்,” என கூறியுள்ளார்.

Views: - 305

0

0